Friday, 7 October 2016

Tamil

திக்குவாய் முனிவர் சொன்ன நீதிக் கதை -6
சாந்திப்பிரியா



பத்மபுராணத்தில் உத்தர காண்டத்தில் இருந்த ஒரு கதையைக் கூறி  நீதி வாக்கு சொன்னார் திக்குவாய் முனிவர். முன்னொரு காலத்தில் காஞ்சிபுரத்தை சோழ மன்னன் ஒருவன் ஆண்டு வந்தான் . அவன் விஷ்ணுவிடம் மிக்க பக்தி கொண்டவன் .அடிக்கடி ஆலயத்துக்குச் சென்று பூஜைகளை செய்துவிட்டு வருவான்.அப்படி பூஜைகளை செய்யும்போது அவன் நிறைய தங்க மற்றும்  வெள்ளி அணிகலன்களையும்  பூக்களைப் போலவே போட்டு அர்ச்சனை செய்வான்.  வந்துள்ள பக்தர்களுக்கு  அவற்றை  பிரசாதமாக வினியோகித்து விடுவான். ஆகவே அவன் புகழ் அனைத்து இடங்களிலும் பரவி இருந்தது.

அவன் நாட்டில் விஷ்ணுசர்மா என்ற பண்டிதர் இருந்தார். அவர் ஏழை. ஆனால் அவரும் பெரும் விஷ்ணு பக்தரே. அவரும் ஆலயத்துக்கு வந்து பூஜை செய்வது உண்டு. ஒரு நாள் அவர் மன்னன் ஆலயத்தில் பூஜைகளை செய்யும்போது வந்தார். மன்னனின் பூஜை முடிந்ததும் தாம் கமண்டலத்தில் கொண்டு வந்த தண்ணீர் மற்றும் துளசிச் செடி இலைகளைப் போட்டே பூஜித்தார். அன்று என்னவோ தெரியவில்லை மன்னனின் பூஜைகளை எவரும் ரசித்துக் கூறவில்லை. விஷ்ணு சர்மாவின் பூஜை முடிந்ததும் அவரிடம் சென்று பிரசாதமாக தீர்த்தம் பெற்றுக் கொண்டு துளசி இலைகளை வாங்கிக் கொண்டு சென்றனர். அரசன் நினைத்தான் 'என்ன இது நான் எத்தனை அணிகலன்களை போட்டு பூசித்தேன். ஆனாலும் அனைவரும் விஷ்ணு சர்மாவிடம் அல்லவா சென்று பிரசாதம் பெற்றுக் கொண்டு சென்றனர். அவர் செய்யும் பூஜை நான் செய்வதை விடவா   உயர்ந்தது?'. எப்படியாக மனதில் கோபம் அடைந்தவர் என்னும் சில தினங்களில் அதே நிலை இருப்பதைக் கண்டார்  . கோபம் ஆத்திரமாக மாறிவிட்டது. அரசவையைக் கூட்டி அதற்கு ஒரு முடிவு கேட்டார். அரசவை பண்டிதர்  அரசன் செய்யும் பூஜை சிறந்ததா இல்லை அந்த ஏழைப் பண்டிதர் செய்யும் பூஜை சிறந்ததா எனப் பார்த்து விடலாம் என முடிவு செய்ய அரசரும் அந்த பண்டிதரும் ஒரு மண்டலம்  தினமும் அந்த ஆலயத்துக்குச் சென்று   பூஜை செய்ய வேண்டும். ஒரு   மண்டலத்துக்குப் பின் விஷ்ணு பகவான்  எவர் முன் பிரசன்னம் ஆவாரோ அவருடைய பூஜையே சிறந்தது என தெரிந்து கொள்ளலாம் என யோசனைக் கூற அதன்படி இருவரும் விஷ்ணுவின் முன் சென்று சங்கல்பம் செய்து கொண்டு அவரிடம் போட்டிக்கான பிராத்தனைகளையும் வைத்தப் பின்  பூஜைகளை மறுநாள் முதல் துவக்கினார்கள்.

தினமும் பூஜைகள் நடந்தன. மன்னன் விஷ்ணுவிற்கு பிடித்தமான விதவிதமான ஹோமங்களையும், பூஜைகளையும் செய்து பூஜைக்கு வந்த அனைவருக்கும் வேண்டிய அளவு பிரசாதம் கொடுத்து உணவும் போட்டு அனுப்பினார். மன்னன் பூஜைகள் செய்வத்தில் எந்த குறையும் வைக்கவில்லை. மனம் லயித்து, முழு மனதுடன் பூஜைகளை செய்தார். வந்தவர்கள் அனைவரும் திருப்தியுடன் உண்டப் பின்   மன்னனை வாழ்த்தி விட்டுச் செல்லலாயினர்.  ஆனால் மிகவும் கந்தலான அழுக்கான உடைகளை உடுத்தி நாட்ற்றமடித்துக் கொண்டு வந்தவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. விஷ்ணு சர்மாவோ வீட்டில் தான் சமைத்து விட்டு அங்கு வந்து எப்போதும் போல பூஜையை செய்தது விட்டுச்  தன் வீட்டுக்குத்தான் சாப்பிடச் சென்றார். ஆனால் அவருடைய பிரசாதத்தை வாங்கிக் கொள்ள நன்கு உணவு அருந்திய பின் எவர் காத்து இருப்பார்கள்?  ஆனால் அதுவரை மன்னன் காத்திருந்து அந்த நிலையை பார்த்தப் பின் மனதில் திருப்தியுடன் வீடு செல்வார்.  விஷ்ணு சர்மா வீட்டில் சென்றதும் தினமும் தான் செய்தது வைத்திருந்த உணவை  எவரோ அருந்தி விட்டுச் சென்று இருந்ததைக் கண்டார். ஆகவே காலை பூஜை முடிந்ததும் பட்டினி, இரவு மட்டுமே சமைத்து சாப்பிட்டார். அந்த நிகழ்ச்சி தினமும் தொடர்ந்தது. ஒரு மண்டலம் ஆயிற்று. கடைசி நாள் பூஜை முடிந்தது.  அனைவரும் சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். கடைசி நாள் என்பதினால் மன்னனும் அனைத்தும் முடியும்வரை அங்கயே தங்கி இருந்தார். விஷ்ணு சர்மாவும் சற்று முன்னதாகவே பூஜைகளை முடித்து விட்டார். தன் வீட்டுக்கு சென்றவர் யாரோ ஒரு  தீண்டத்தகாதவன் போல இருந்தவன் வீட்டுக்குள் நுழைந்து  சாப்பாட்டை எடுத்துக் கொண்டு போவதைக் கண்டு அவரை நிற்குமாறு  கூவி அழைத்தார். வந்தவர் ஓடினார். விஷ்ணு சர்மா அவரை துரத்தினார். வந்தவன் ஆலயத்தின் முன்னாள் சென்று விழுந்தான். மன்னனோ மற்ற எவருமோ அவனிடம் சென்று என்ன ஆயிற்று எனக் கேட்கவில்லை. தூரத்தில் நின்றபடி விழுந்தவனை பார்த்தார்கள். துரத்தி வந்த விஷ்ணு சர்மாவோ ஓடிச் சென்று அவனை தூக்கி உட்கார வைத்தார். என்னும் பசிக்கின்றது என்றால் வீட்டுக்கு வா இன்னும் உணவு தருகிறேன் என்றார்.

அடுத்தகணம் அங்கு திருமால் அவர் முன் ஜொலித்தபடி  நின்று இருந்தார். அவரைக் கண்டதும் விஷ்ணு சர்மா அவர் முன் விழுந்து வணங்கினார்.  மன்னரும் மற்றவர்களும்  ஓடி வந்தனர். விஷ்ணுவை வணங்கினார்கள். விஷ்ணு கூறினார் 'மன்னா உன் பூஜையில் எந்தக் குறையும் இல்லை. அவற்றை நான் மனதார நிறைவாகவே ஏற்றுக் கொண்டேன். ஆனால் இங்கிருந்து சென்றதும் மற்ற வேளைகளில் அதை மறந்து விட்டேன்.  ஆனால் விஷ்ணு சர்மா செய்த பூஜை என் மனதில் அமைதியை ஏற்படுத்தியது, மனதில் என்னை மீறிய மகிழ்ச்சியை தந்தது. நாள் முழுவதும் அவர் செய்த பூஜையின் ரீங்காரம் என்னை தொடர்ந்தது. ஆகவே இருவரின் பூஜைகளுமே என்னை வந்தடைந்தாலும்,  அவற்ற்றை நான் ஏற்ற்றுக் கொண்டாலும் விஷ்ணு சர்மாவின் மந்திர ரீங்காரம் என்னை விட்டு அகல மறுக்கின்றது என்பதே உண்மை'எனக் கூறி அனைவரையும் ஆசிர்வதித்து விட்டுச் சென்றார்.  மன்னன் வெட்கமடைந்தான். உண்மையை புரிந்து கொண்டான். விஷ்ணு சர்மாவுக்கு நிறைய பொருள் தந்து  தன் நாட்டு ஆலயங்களின் முதன்மை பண்டிதராக நியமித்துக் கொண்டான்.

Friday, 27 February 2015

வை - பையை முந்தும் லி-பை! லி-பை LiFi

வை - பையை முந்தும் லி-பை! லி-பை....!!

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் லி-பை என்ற தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கின்றனர். வை-பை தொழில்நுட்பம் ரேடியோ அலைவரிசையை பயன்படுத்துகிறது. ஆனால் லி-பை உபயோகிப்பது நம் கண்ணுக்குத் தெரியும் எல்.இ.டி., போன்ற விளக்கு வெளிச்சம், அகச் சிவப்புக் கதிர் போன்றவற்றை பயன்படுத்துகிறது. ஒளியைப் பயன்படுத்துவதால் தகவல் பரிமாற்றம் மிகவும் வேகமாக நடக்கும். இணையத்தில் லி-பை மூலம் ஒரு நொடியில் 30 முழு படங்களையே டவுண்லோடு செய்யலாம். அதாவது, ஒரு வினாடிக்கு 224 ஜிகாபிட் வேகம். இந்த தொழில்நுட்பத்திற்கு லிபை என்று பெயரிட்டவர் பேராசிரியர் ஹெரால்ட் ஹாஸ்.
ஹெரால்ட் ஹாஸ்

இன்னும் சில வருடங்களில் உலகெங்கும் 14 பில்லியன் மின் விளக்குகள் இருக்கும் என்கின்றனர். எனவே, 14 பில்லியன் லி-பை ஒளிபரப்பு மையங்கள் இணையப் பயனாளிகளுக்குக் கிடைக்கும்.


விரைவில் செயற்கை இலை! ஹார்வர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் செயற்கை இலையை உருவாக்குவதில் வெற்றி கண்டிருக்கின்றனர். சூரிய ஒளியை பச்சையம் மூலம் சக்தியாக மாற்றும் தன்மை தாவரங்களில் உள்ள இலைகளில் நடக்கும் விந்தை. இதை செயற்கை முறையில் உருவாக்கி, சூரிய ஒளியிலிருந்து திரவ எரிபொருளை உருவாக்கலாம் என்று ஹார்வர்டை சேர்ந்த விஞ்ஞானி டேனியல் நோசெராவின் குழுவினர் கண்டறிந்துள்ளனர். சூரிய ஒளி மற்றும் ஒரு பாக்டீரியா ஆகியவற்றின் உதவியுடன் இந்த செயற்கை இலை திரவ எரிபொருளை உருவாக்குகிறது. இதை பெருமளவில் தயாரிக்க முடிந்தால் பர்சனல் கம்ப்யூட்டர் போல.
பர்சனல் எரிபொருள் உற்பத்தி நிலையத்தை வீட்டின் கொல்லைப் புறத்தில் உருவாக்க முடியும். ஆனால், இந்த செயற்கை இலை, சுற்றுச்சூழலுக்கு பங்கம் விளைவிக்காது. 


யூ ட்யூபுக்கு( YouTube ) 10 வயதாகிறது. 2005 பிப்ரவரி 14ல் மூன்று இளைஞர்களால் துவங்கப்பட்ட இந்த இணைய வீடியோ சேவை நிறுவனத்தை பிறகு கூகுள் வாங்கியது. எல்லாத் தரப்பினரையும் வீடியோ படைப்பாளிகளாக மாற்றியது யூ ட்யூப். பல திறமையாளர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்தது.
சாதாரணமானவர்களையும் ஸ்டார்களாக மாற்றியது. இப்போது ஒரு பில்லியன் பார்வையாளர்களைத் தாண்டி சாதனை படைத்திருக்கிறது. கான் அகாடமி போன்ற பல புரட்சிகரமான கல்வி அமைப்புகளுக்கு ஊக்கம் தந்ததன் மூலம் அறிவு விருத்திக்கும் யூ ட்யூப் வித்திட்டது

பொது அறிவு - பொது அறிவியல் வினா விடை

மலேரியாவைப் பரப்பும் உயிரினம் எது? அனோபிலஸ் பெண் கொசு


பைலோரியாசஸ் பரப்பும் வைரஸ் எது? ஊச்சரேரியா பிரங்கிராப்டி 

நோய் பரப்பிகள் உயிரியல் வழி எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகின்றன? கம்பூசியா மீன்களை வளர்ப்பதன் மூலமாக 

பன்றிக் காய்ச்சலை உருவாக்கும் தீங்குயிரி எது? H1 N1 வைரஸ்

திண்மப் பொருள் திரவப் பொருளுடன் எவ்வாறு வேறுபடுகிறது? பாயும் தன்மை இருப்பதால் 

 உமியோடு மண்புழுக்கள் சேர்த்து தயாரிக்கப்படும் உரம் எது? வெர்மி கம்போஸ்ட்

நெல் பயிரிடும் நிலத்திலிருந்து வெளியாகும் வாயு எது? மீத்தேன் 

புரதச்சத்துள்ள உணவுப் பொருளுக்கு எடுத்துக்காட்டு? பருப்பு

பாஸ்டியர் முறையில் பால் எந்த வெப்ப நிலையில் காய்ச்சப்படுகிறது? 60 டிகிரி செல்சியஸ் 

உணவுப் பொருள்களை நுண்ணுயிரியின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கப் பயன்படும் இயற்கையான பதப்படுத்தி எது? சாதாரண உப்பு 

மனித உடலில் உள்ள எலும்புகளில் மிகச் சிறியது எது? ஸ்டேபஸ் 

சிறு மூளையின் வேலை எது? உடல் சம நிலைமை கட்டுப்படுத்துதல்

உயிர் முடிச்சு என அழைக்கப்படுவது எது? முகுளம் 

 கண் பார்வைக்குத் தேவையானது எது? வைட்டமின் ஏ 

மண்டை ஓட்டில் உள்ள அசையா மூட்டுகளின் எண்ணிக்கை?8

காற்றின் வாயிலாக விதை பரவுதலுக்கு எடுத்துக்காட்டு? எருக்கு

வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை சுழற்சியை வரிசைப்படுத்துக? முட்டை, புழு, கூட்டுப்புழு, வண்ணத்துப்பூச்சி 

நுண்ணுயிரியின் தந்தை என்று அழைக்கப்படுபவர்? லூயி பாஸ்டியர் 

 மூன்றாம் வகை நெம்புகோலுக்கு எடுத்துக்காட்டு தருக?ஆய்வகத்தில் பயன்படும் இடுக்கி 


உணவில் இருப்பது எவ்வகை ஆற்றல்? வேதி ஆற்றல் 

TN SI Study meterial உதவி காவல் ஆய்வாளர்

வினாக்கள் கேட்கபடும் பிரிவுகள்

Science-30%
Economics-16%
Tamil-12%
Gegraphy-9%
English-8%
History-6%
Polity-6%
Maths-5%
Book Author-4%

Others-4%

Friday, 3 October 2014

Chief Ministers of Tamil Nadu since 1920

Chief Ministers of Tamil Nadu since 1920

1.

Thiru A Subbarayalu

17-12-1920 to 11-07-1921

2.

Thiru Panagal Raja

11-07-1921 to 03-12-1926

3.

Dr. P Subbarayan

04-12-1926 to 27-10-1930

4.

Thiru P Munuswamy Naidu

27-10-1930 to 04-11-1932

5.

Thiru Ramakrishna Ranga Rao,Raja of Bobbili

05-11-1932 to 04-04-1936

6.

Thiru P T Rajan

04-04-1936 to 24-08-1936

7.

Thiru Ramakrishna Ranga Rao,Raja of Bobbili

24-08-1936 to 01-04-1937

8.

Thiru Kurma Venkata Reddy Naidu

01-04-1937 to 14-07-1937

9.

Thiru C Rajagopalachari

14-07-1937 to 29-10-1939

10.

Thiru Tanguturi Prakasam

30-04-1946 to 23-03-1947

11.

Thiru O P Ramaswamy Reddiyar

23-03-1947  to 06-04-1949

12.

Thiru P S  Kumaraswamy Raja

06-04-1949  to 09-04-1952

13.

Thiru C  Rajagopalachari

10-04-1952  to 13-04-1954

14.

Thiru K Kamaraj

13-04-1954  to 02-10-1963

15.

Thiru M Bakthavatsalam

02-10-1963  to 06-03-1967

16.

Dr. C.N. Annadurai

06-03-1967  to 03-02-1969

17.

Dr. Kalaignar M Karunanidhi

10-02-1969 to  04-01-197115-03-1971 to  31-01-1976

18.

Dr. M G Ramachandran

30-06-1977 to 17-02-198009-06-1980 to  15-11-198410-02-1985 to 24-12-1987

19.

Thirumathi Janaki Ramachandran

07-01-1988 to  30-01-1988

20.

Dr. Kalaignar M Karunanidhi

27-01-1989 to 30-01-1991

21.

Dr. Selvi J Jayalalithaa

24-06-1991 to 12-05-1996

22.

Dr. Kalaignar M Karunanidhi

13-05-1996 to  13-05-2001

23.

Dr. Selvi J Jayalalithaa

14-05-2001 to  21-09-2001

24.

Thiru O. Panneerselvam

21-09-2001 to  01-03-2002

25.

Dr. Selvi J Jayalalithaa

02-03-2002 to 12-05-2006

26.

 Dr. Kalaignar M. Karunanidhi

 13-05-2006 to 15-05-2011

 27.28.

 Dr. Selvi J JayalalithaaThiru O.Pannerselvam

 16-05-2011 to 27-09-2014 29-09-2014 onwards 




TNPSC Syllabus